Skip to main content

Posts

நிவாரணப்பணிகளில் அறம் வழி அறக்கட்டளை தனவந்தர்களும் இணைந்துள்ளனர்.

அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு, திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெறுகின்ற நிவாரணப்பணிகளில் அறம் வழி அறக்கட்டளை தனவந்தர்களும் இணைந்துள்ளனர். இதற்கமைவாக அக்கரைப்பற்று கோளாவில் பிரதேசத்தை சேர்ந்த சுமார் 50 குடும்பங்களுக்கான பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் இதற்கான நன்கொடையினை லண்டனில் வசிக்கும் கினோதினி நாதன் மற்றும்  ரிஷாந்தன் சபாபதிபிள்ளை அவர்களால் வழங்கப்பட்டன, திருக்கோவில்  காஞ்சிரங்குடா பிரதேசத்தை சேர்ந்த சுமார் 55 குடும்பங்களுக்கான பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் இதற்கான நன்கொடையினை கனடாவில் வசிக்கும் விஜி தரணி அவர்கள் வழங்கியிருந்தார்கள் ,அக்கரைப்பற்று மகாசக்தி கிராமத்தில் வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் (110 குடும்பம்) பெறுமதியான உலர் உணவுப்பொதிகளை இதற்கான நன்கொடையினை லண்டனில் வசிக்கும் திரு திருமதி பேரானந்தம் அவர்கள் வழங்கியிருந்தார்கள், அறம் வழி அறக்கட்டளை அமைப்பின் ஊடாக. சமூக மட்டத்தில் பலர் பொருளாதார வசதி வாய்ப்புக்களுடன் உள்ள நிலையில் தானாக முன்வந்து இவ்வாறான நிவாரணப்பணியை வழங்கியமையிட்டு அறம் வழி அறக்கட்டளை அமைப்பு தங்களது நன்கொடையாளர்களை  பெரு...
Recent posts

அம்பாறை; தம்பிலுவில் பகுதியில் அறம் வழி அறக்கட்டளையினரால் சுய தொழில் ஊக்குவிப்பு

அம்பாறை தம்பிலுவில் - 02 பகுதியில் வசிக்கும் திருமணமாகாத, வளர்ந்த 3 பெண் பிள்ளைகள் உட்பட 4 பெண்பிள்ளைகளின் தாய் ஒருவருக்கு சுயதொழில் முயற்சிக்காக தையல் இயந்திரம், பாடாசலை மாணவர்கள் உட்பட வேலை செல்பவர்களுக்கு/உத்தியோகத்தர்களுக்கு காலை உணவு தயாரித்து வியாபாரம் செய்வதற்கான அடிப்படை பொருட்களும் அதற்கு ஆரம்பகட்டத்திற்கு தேவையான அரிசி, கோதுமை மா போன்றவையும் வழங்கப்பட்டன. இவர்களுடைய குடும்பம் இவருடைய மகள் ஒருவரின் சிறு வருமானத்திலேயே இதுவரை காலமும் தங்கி வாழ்ந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதனை கண்டறிந்து தந்த தம்பிலுவில் 2 பகுதி கிராம_நிலதாரி கண்ணன் ஐயா அவர்களுக்கு எங்களது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். அத்துடன் இதற்கான நன்கொடையை்வழங்கிய #சத்தியா #அருணாசலம் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகளுடன் வாழ்த்துக்கள். இக்குடும்பத்திற்கு மேலும் உதவ விரும்புவர்கள் அல்லது இதுபோல் வேறு குடும்பங்களுக்கு உதவ விரும்புவர்கள் 00 94 (75) 079 7490 அல்லது +94 (75) 565 8259  எனும் இலக்கங்களுக்கு அல்லது உள்பெட்டியினூடாக தொடர்புகொள்ளுங்கள். - நன்றி உறவுகளே 🙏