அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு, திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெறுகின்ற நிவாரணப்பணிகளில் அறம் வழி அறக்கட்டளை தனவந்தர்களும் இணைந்துள்ளனர். இதற்கமைவாக அக்கரைப்பற்று கோளாவில் பிரதேசத்தை சேர்ந்த சுமார் 50 குடும்பங்களுக்கான பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் இதற்கான நன்கொடையினை லண்டனில் வசிக்கும் கினோதினி நாதன் மற்றும் ரிஷாந்தன் சபாபதிபிள்ளை அவர்களால் வழங்கப்பட்டன, திருக்கோவில் காஞ்சிரங்குடா பிரதேசத்தை சேர்ந்த சுமார் 55 குடும்பங்களுக்கான பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் இதற்கான நன்கொடையினை கனடாவில் வசிக்கும் விஜி தரணி அவர்கள் வழங்கியிருந்தார்கள் ,அக்கரைப்பற்று மகாசக்தி கிராமத்தில் வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் (110 குடும்பம்) பெறுமதியான உலர் உணவுப்பொதிகளை இதற்கான நன்கொடையினை லண்டனில் வசிக்கும் திரு திருமதி பேரானந்தம் அவர்கள் வழங்கியிருந்தார்கள், அறம் வழி அறக்கட்டளை அமைப்பின் ஊடாக. சமூக மட்டத்தில் பலர் பொருளாதார வசதி வாய்ப்புக்களுடன் உள்ள நிலையில் தானாக முன்வந்து இவ்வாறான நிவாரணப்பணியை வழங்கியமையிட்டு அறம் வழி அறக்கட்டளை அமைப்பு தங்களது நன்கொடையாளர்களை பெரு...